Bible Students Tamil

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே!,

வேதமாணவர்கள் யார்?

  • வேதமாணவர்கள் எந்த ஓரு சபையையும் சாராதவர்கள். வேதமாணவர்கள் உலகமெங்கும் பரவி உள்ளனர்
  • உலகப்பிரகாரமான எந்த ஓரு அமைப்பிலும் தங்களைப் பதிவு செய்து கொள்ளாத சுயாதீனமுள்ளவர்கள்.
  • ஊழியத்திற்கென்று ஊதியம் பெறாத வேலையாட்கள். (1 தீமோ – 3 அதிகாரம், தீத்து 1 அதிகாரத்தின்படி), தேவனுக்கென்று தங்களை ஓப்புக்கொடுத்தவர்கள்.
  • தேவனுடைய வேலைக்கென்று காணிக்கை, தசமபாகம் வாங்குவதில்லை.
  • சத்திய வேலைக்குரிய எல்லா செலவுகளையும் தேவனுக்கென்று தங்களை ஓப்புக்கொடுத்த சகோதரர்களால் தாங்கப்படுகிறது.
  • வேதமாணவர்களுக்கென்று இந்த உலகில் நிலங்களோ, கட்டிடங்களோ இல்லை. சிறு கூட்டமாக வீடு மற்றும் வாடகை கட்டிடத்தில் ஆராதனைக்கென்று கூடுகிறவர்கள்.

வேதமாணவர்களின் விசுவாசம்

  • கிறிஸ்துவை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின்பலி, கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்லாது உலக ஜனங்கள் அனைவருக்கும் உரியது. (1 தீமோ – 2:5,6 ; 4:10 மற்றும் யோவா – 3:16).
  • வேதம் தேவனுடைய வார்த்தையென்றும், வேதமானது தேவனுடைய மனுஷர் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, எழுதப்பட்டது. இதை தேடி வாசிக்கவேண்டும்.(2 தீமோ – 3:16,17 ; யோவான் – 5:39 மற்றும் ஏசாயா – 34:16).ஓவ்வொரு தலைப்புகளின் கீழும் படிப்பதால், தேவனுடைய முழுத்திட்டத்தையும் அறிந்துகொள்ள முடியும் (2 தீமோ – 2:15).
  • தேவனுடைய முழுத்திட்டத்தையும் அறிந்துகொள்ள தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் இருக்கின்ற சகோதரர்களுக்கு தொடர்ச்சியான வேதபாட விளக்கங்கள் நேரில் விளக்கப்படும்.
  • தேவனுக்கென்று தங்களை ஓப்புக்கொடுத்தவர்கள் துன்பங்கள் மற்றும் உபத்திரவங்கள் மூலமாக மகிமைக்குள் செல்வார்கள். (ரோம – 12:1,2 மற்றும் 2 தீமோத் – 2:11,12).

வேதமாணவர்கள் கர்த்தருக்கென்று செய்யும் வேலைகள்

  • தேவனுடைய திட்டங்களை அறிந்துகொள்ள விருப்பமுடைய சகோதர, சகோதரிகளை எங்களுடைய ஆராதனை மற்றும் தொடர் வேதபாட வகுப்புகளில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
  • மத்தேயு – 24:14 ன் படி, தேவனுடைய இராஜ்யத்தின் சுவிசேஷம் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படும், வரையில் பொதுக்கூட்டங்கள், தொடர்ச்சியான இலவச வேதபாட வகுப்புகள், தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் வேதவிளக்க உரைபுத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய இராஜ்யத்திற்க்கான பணிகளை செய்தல்.
  • வேதமாணவர்கள் அங்காங்கே கூடி சத்தியத்தை பகிர்ந்துகொண்டு, கிறிஸ்துவினுடைய அன்பிலும் ஐக்கியத்திலும் வளர்வதற்கு வருடத்திற்கு ஓன்று அல்லது ஓன்றுக்கும் மேற்பட்ட கூடுகை.