கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளே!,
வேதத்தைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சகோதர, சகோதரிகளுக்காக, இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த விதத்திலும் ஆதாயம் தேடும் நோக்கத்தில் அமைந்ததல்ல. வேதத்தில் உள்ளதை உள்ளபடி வசனத்தின் மூலமாக எடுத்துச்சொல்வதே வேதமாணவர்களின் தலையாய நோக்கம்.
இந்த இணையத்தளத்திலுள்ள வேதபாடங்களை ஓன்றன்பின் ஓன்றாக முறைப்படி தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த முறையில் நீங்கள் படித்து வேதத்தைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள தேவனுடைய கிருபையினால் உங்களுக்கு கிடைத்த ஓரு வாய்ப்பு. மேலும், வேதபாடங்களைக் குறித்த சந்தேகங்கள், விளக்கங்கள் வசனத்தின் மூலமாக உங்களுக்கு எந்தநேரத்திலும், எந்த இடத்திலும் விளக்கத் தயாராக உள்ளோம்.
உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் தொடர்ச்சியான வேதபாட வகுப்புகள் உங்கள் பகுதியில், உங்களுக்கு உகந்த நேரத்தில் இலவசமாக எங்கள் சகோதரர்கள் நடத்த தயாராக இருக்கிறார்கள். இதற்காக உங்களுடைய நேரத்தை மாத்திரம் ஓதுக்கினால் போதும்
எங்களது சகோதரர்களைத் தொடர்புகொள்ள உங்களை கர்த்தருக்குள் அன்புடன் அழைக்கிறோம்.
தேவனுடைய கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென்!!